» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

திருநெல்வேலியில் சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026ஐ முன்னிட்டு, முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் நடைபெற்றது
திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் இன்று (07.01.2026) முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 2026, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (VVPATs) ஆகியவை, திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பெங்களுரைச் சேர்ந்த BEL நிறுவன பொறியாளர்களால் இவ்வியந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது 11.12.2025 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேற்படி முதல்நிலை சரிபார்ப்பு பணியானது நேற்றுடன் 06.01.2026 நிறைவடைந்துள்ளது.
மேற்படி சரிபார்ப்பு பணியில் Control Unit -2329, Ballot Unit-4190, VVPAT- 2970 எண்ணிக்கையில் நல்ல நிலையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், மேற்படி சரிபார்ப்பு பணியில் Control Unit 29, Ballot Unit-21, VVPAT- 72 எண்ணிக்கையிலும் குறைபாடு (Defective) உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இன்று 07.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள இயந்திரங்களில் 5% அதாவது 120 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 120 இயந்திரங்களில் 1% அதாவது 24 இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 % அதாவது 48 இயந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 % அதாவது 48 இயந்திரங்களில் 500 வாக்குகளும் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளின் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (07.01.2026) 60 இயந்திரங்களில், நாளை (08.01.2026) 60 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நதிநீர் இணைப்பு திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மாரிச்செல்வி , தேர்தல் வட்டாட்சியர் முருகன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 8, ஜனவரி 2026 11:46:31 AM (IST)

