» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனிதநேயத்துடன் ஒற்றுமையாக வாழ உறுதி ஏற்போம் : நடிகர் சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 10:36:04 AM (IST)

2025 ஆம் ஆண்டில் நம்பிக்கையுடன் எடுத்த செயல்களில் வெற்றி காண மனிதநேயத்துடன் ஒற்றுமையாக வாழ உறுதி ஏற்போம் பொதுமக்களுக்கு பாஜக பிரமுகர் நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "2024 ஆம் ஆண்டில் கடந்து சென்ற பாதைகளை நினைவலைகளாக தாங்கி, 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உலகெங்கும் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நாம் வரவேற்கும் தருணத்தில், மக்களின் வாழ்வு வளம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் சமூகக்குற்றச் செயல்கள் இந்த ஆண்டிலாவது அதிகரிக்காத வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன், மனிதநேயத்துடன் ஒற்றுமையாக வாழ உறுதியேற்போம்.  உளவியல் சார் கல்வியில் ஒழுக்கநெறிகளுடன், அன்பு, கருணை, ஈகை, ஒற்றுமை பாராட்டல், சமத்துவம், சகோதரத்துவத்தையும் போதிப்போம்.

இந்த இனிய ஆங்கில புத்தாண்டில், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், ஆரோக்கியமும் மேலோங்கி, புதிய சிந்தனை, புதிய முயற்சி, புதிய வாய்ப்புகள், நம்பிக்கையுடன் எடுத்த செயல்களில் வெற்றி காண வாழ்த்தி, என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், சமத்துவ சொந்தங்கள் சார்பாகவும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory