» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்சார வாரியம்

செவ்வாய் 31, டிசம்பர் 2024 10:25:50 AM (IST)

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. டெண்டரில் குறைந்த விலை கேட்டு அதானி நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மின் மீட்டர் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory