» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: நவ.7-க்கு ஒத்திவைப்பு
செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:08:24 PM (IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவ.7-க்கு ஒத்திவைத்தது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர், டிரைவர், தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதுபோன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 வழக்குகளில் ஒரு வழக்கில் 14 பேரும், இன்னொரு வழக்கில் 23 பேரும், மற்றொரு வழக்கில் 2 ஆயிரத்து 202 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தடயவியல்துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கை நவ.7-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


