» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; மாணவி படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:06:05 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
நெல்லை பாளையங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல் மகன் ஜான் டேவிட் (21). செங்கோட்டை ராணா குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் மகள் சுமதி (20) இவர்கள் இருவரும் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்கள். இருவரும் தூத்துக்குடியில் ஒரு கம்பெனியில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு வந்துவிட்டு மீண்டும் பைக்கில் நெல்லை சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜான் டேவிட் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த திருச்சி துறையூர் செந்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் ஜெனிட் குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Sep 3, 2024 - 06:04:45 PM | Posted IP 172.7*****
நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தை எந்த தடத்தில் ஓட்ட வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை.
அதுவே இதுபோன்ற விபத்திற்குக் காரணம்....
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)

Contact numberSep 4, 2024 - 08:32:20 AM | Posted IP 162.1*****