» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!

புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)



தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா, புகையிலை வைத்திருந்த 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பாலதண்டாயுத நகர் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்களை பிடித்து சோதனை மேற்கொண்ட போது அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்து.

இதனைத் தொடர்ந்து விசாரணையில் அவர்கள் பாலதண்டாயுதநகர் பகுதியைச் சேர்ந்த சண்முக விக்னேஷ் (29) கௌதம் கண்ணன் (21) ரமேஷ் என்ற ரமேஷ் கண்ணன் (22), மாப்பிள்ளையூரணி சச்சின் (23) என்பதும் இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடி பட்டியலில் இருந்து வருவதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர. 

இதேபோல் தாளமுத்துநகர் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலங்காரதட்டு மீனவர் காலனி அந்தோணிஜெகன் (20) லூர்தம்மாள்புரம் முகேஷ் (22 ) மற்றும் வெள்ளப்பட்டி அய்யனார்புரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்த முருகன்( 37) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory