» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அருகே மீனவர் சரமாரி குத்திக்கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:22:30 AM (IST)
கூடங்குளம் அருகே மீனவரை சரமாரியாக குத்திக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழி பகுதியைச் சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் அஜித் (34), மீனவர். இவர் நேற்று மாலையில் அங்குள்ள கிறிஸ்தவ கெபி அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அஜித்திடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூடங்குளம் போலீசுக்கும், அஜித்தின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அஜித்துக்கும், ஒருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அஜித்தை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருந்தாலும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அஜித் மீது மணல் கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவரை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கூடங்குளம் அருகே மீனவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:07:13 AM (IST)

திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:28:51 PM (IST)

வேஷம் போடும் நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் : விஜய் மீது முன்னாள் அமைச்சர் தாக்கு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:24:27 PM (IST)

விஜய் கட்சியில் கண்ணியம், கட்டுப்பாடு இல்லை : அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:08:04 PM (IST)

மலேசிய சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:00:26 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)
