» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூர் பராமரிப்புப் பணி: தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!
சனி 14, மார்ச் 2026 12:21:10 PM (IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (Platforms) மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் சில முக்கிய ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) ரெயில், மார்ச் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல், மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) ரெயில், மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை எழும்பூர் வராமல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், எழும்பூரில் இருந்து காலை 8:00 மணிக்குத் திருச்சி நோக்கிப் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் (22675) ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை, வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக, அதாவது காலை 10:15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூர் நடைமேடை சீரமைப்புப் பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக மாற்றங்கள் அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் இதற்கேற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரீல்ஸ் நல்லா போடுறீங்க... கல்வியே மிக முக்கியம் - இன்ஸ்டா சிறுவர்களுக்கு முதல்வர் அறிவுரை!
சனி 14, மார்ச் 2026 12:40:52 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா? நயினார் நாகேந்திரன் விளக்கம்
சனி 14, மார்ச் 2026 12:06:04 PM (IST)

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை: ஏப்.6ஆம் தேதி முதல் தொடக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:34:34 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 13, மார்ச் 2026 4:14:42 PM (IST)

