» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை: ஏப்.6ஆம் தேதி முதல் தொடக்கம்!

சனி 14, மார்ச் 2026 11:34:34 AM (IST)

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை வருகிற ஏப்.6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

பயணிகளின் வசதிக்காக, தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா – மதுரை (07191/07192) ரயிலை, நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்த ரயில் "காச்சிகுடா – தூத்துக்குடி விரைவு ரயில்" என்ற பெயரில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும்.

இதற்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. காச்சிகுடா – தூத்துக்குடி(07191/07192) காச்சிகுடாவில் இருந்து ஏப்ரல் 6, 2026 முதல் (திங்கட்கிழமை), தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தொடங்குகிறது. காச்சிகுடாவில் இருந்து திங்கட்கிழமைகளிலும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமைகளிலும் இந்த ரயில் வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும்.

பயண கால அட்டவணை மற்றும் முக்கிய நிறுத்தங்கள்: இந்த ரயில் காச்சிகுடாவில் திங்கள் மதியம் 3.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்) இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து புதன் காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் மதியம் 1.25 மணிக்கு காச்சிகுடாவை அடையும்.

தமிழகத்தில் முக்கிய நிறுத்தங்கள்: வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இந்த ரயில் சேவையின் விரிவாக்கம், தென் தமிழக மக்கள் தெலங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று பயணிகள்  மகிழ்ச்சியை் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory