» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பா.ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:23:10 AM (IST)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பா.ஜனதா வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி வரும் 9-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சென்னையில் 3 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பா.ஜனதா சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, கிஷண் ரெட்டி, உத்திரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய மகளிர் ஆணையத் தலைவி குஷ்பு உள்ளிட்ட 40 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory