» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

தூத்துக்குடியில் செல்போன் கடைகளில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்
ஆப்பிள் போன் (iPhone) உதிரி பாகங்கள், மற்றும் தயாரிப்புகள் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆய்வாளர் பியூலா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி தெற்கு புது தெரு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் காப்புரிமை சட்டத்திற்கு முரணாக ஆப்பிள் போன்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? போலி உதிரி பாகங்களை பயன்படுத்தி பழுதுபார்க்கப்படுகிறதா? என்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 4 கடைகளில் இருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான போலி ஆப்பிள் போன் உதிரி பாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேருக்கு கைது அறிக்கையை சமர்ப்பித்தனர். ஓரிரு தினங்களில் இவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : அன்புமணி பேச்சு
வெள்ளி 9, ஜனவரி 2026 12:55:23 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையம் கட்ட எதிர்ப்பு: ஜமாத்தார்கள் திரண்டதால் பரபரப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 11:40:35 AM (IST)

ஜனநாயகன் படத்தின் பேனா் விழுந்து அரசு ஊழியா் படுகாயம்: தவெக நிா்வாகிகள் 3போ் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:30:37 AM (IST)

ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 9, ஜனவரி 2026 10:55:38 AM (IST)