» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல் : தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:57:04 AM (IST)

tutyTraffic.jpg

தூத்துக்குடி மாநகரில் விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி நகர பகுதி வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக பள்ளிகள் இயங்கி வரும் மேற்கு ரதவீதி, ரெங்கநாதபுரம், டூவிபுரம், சண்முகபுரம், பெருமாள்புரம், புதுக்கிராமம், சங்கராபுரம், தாமரோதர நகர் மெயின் ரோடு, பக்கிள்புரம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகளில் விதிமுறைகளை மீறி சாலையோரம் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். 

போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பிற வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் விபத்துக்குள்ளாகின்றனர். 

விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈட வேண்டும். மேலும், தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

"தூத்துக்குடியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள குறுகிய சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டு ரூ.2ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

வாழ்த்துகள்Aug 18, 2026 - 01:04:05 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி நகரில் வரைமுறைப்படுத்தப்பட்ட (peak hours) நேரங்களில் நகர் பகுதியில் சுற்றி வரும் உள்ளூர் சண்டிங் லாரிகள் மீது எப்போது தான் நடவடிக்கை எடுக்கப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory