» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா இன்று காலை தொடங்கியது.
கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும், வசந்த விழாவாகவும் விளங்கும் ஓணம் பண்டிகை, சாதிமத பேதமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழா, தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரளத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையிலும் 10 நாட்கள் பாரம்பரியமாக நடத்தப்படுவது வழக்கம்.
இன்றைய தினம் அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பந்தலில், அரண்மனை அதிகாரி சது குத்துவிளக்கேற்றி ஓணம் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கேரளப் பாரம்பரிய உடை அணிந்து வந்த அரண்மனை பெண் ஊழியர்கள், வண்ண மலர்களால் அழகிய அத்தப்பூ கோலமிட்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அரண்மனையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து பெண் ஊழியர்கள் ஆடி மகிழ்ந்ததுடன், ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் உற்சாகமாக நடத்தப்பட்டன. இன்றிலிருந்து வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தினமும் ஒரு புதிய வடிவத்தில் அழகிய அத்தப்பூ கோலங்கள் இடப்படவுள்ளன.
மேலும், பாரம்பரிய ஓண விருந்து (ஓணசத்யா) மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. ஓணம் திருவிழாவையொட்டி பத்மநாபபுரம் அரண்மனை வளாகமும் அதன் கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)


