» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 2-வது ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணக் கோரி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் அதிமுக முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளர் எஸ். ஏசாதுரை கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மையப்பகுதியில் உள்ள 2-வது ரயில்வே கேட் ஒரு நாளைக்குச் சுமார் 46 முறை மூடப்படுகிறது. இதனால் பள்ளிச் செல்லும் மாணவர்கள், வணிகர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 'ஷண்டிங்' என்ற பெயரில் 1-வது கேட்டிலிருந்து வரும் ரயில் பாதி தூரம் வரை மட்டுமே வந்து செல்கிறது. இருப்பினும் 2-வது கேட்டும் சேர்த்து அடைக்கப்படுகிறது.
1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட் ஆகிய இரண்டிற்கும் ஒரே சிக்னல் முறை செயல்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணமாகும். எனவே, இந்த அமைப்பை மாற்றி 2-வது கேட்டிற்குத் தனித்தனியாகச் சிக்னல் முறை அமைத்து, பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒன்றிய ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி அளிக்கப்பட்ட இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி, இப் பிரச்சனை தொடர்பாகத் தான் ஏற்கனவே ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் இதற்குச் சரியான தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மக்கள் கருத்து
ஒட்டு போட்ட முட்டாள்Aug 17, 2026 - 04:12:18 PM | Posted IP 104.2*****
கடந்த 10 வருட ஆட்சியில் காதுல குடைந்து இருக்கீங்களா? இப்போ எந்த பயனும் இல்லை
முட்டாள்Aug 17, 2026 - 03:49:55 PM | Posted IP 104.2*****
கனிமொழியிடம் மணு கொடுப்பதும் எந்த பயனும் இல்லை.
கந்தசாமிAug 17, 2026 - 11:31:19 AM | Posted IP 104.2*****
ரெயில்வே நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)



மக்கள்Aug 17, 2026 - 09:22:02 PM | Posted IP 162.1*****