» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எஸ்பி கார் முன் அமர்ந்து கர்ப்பிணி போலீஸ் திடீர் தர்ணா: பணியிடை நீக்கத்தால் ஆவேசம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 8:36:32 AM (IST)
தூத்துக்குடியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் ஆவேசமடைந்த கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி. இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். ஒரு புகார் தொடர்பாக இவர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். கர்ப்பிணியாக இருக்கும் இவர், தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த இந்திரா காந்தி, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த எஸ்பி வாகனத்தின் முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட காவலர் கூறுகையில்:"பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்பட வேண்டிய வாழ்வாதார உதவித்தொகையும் (Subsistence Allowance) எனக்கு முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளேன். தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் எனக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
கர்ப்பிணி காவலர் திடீரெனத் தர்ணாவில் ஈடுபட்டதைக் கண்ட சக போலீசார், உடனடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)



BabuAug 16, 2026 - 07:21:22 PM | Posted IP 162.1*****