» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது!
திங்கள் 29, ஜூன் 2026 8:36:14 AM (IST)

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உட்பட 1,176 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் தீவிரமாக நடைபெற்றது.
மையங்களுக்கு வர இயலாதவர்களுக்காக 12 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இப்பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர், அரிமா மற்றும் ரோட்டரி சங்கத்தினர், தன்னார்வலர்கள் என மொத்தம் 4,704 பணியாளர்கள் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 781 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இம்முகாமைத் தொடங்கி வைத்தார்.
நாசரேத் பகுதியில்
நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த முகாம் குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு,கருவேலம்பாடு,கண்டுகொண்டான்மாணிக்கம்,
வாழையடி, நாசரேத் ரோஜாப்பூ தெரு,முதலைமொழி, வைத்தியலிங்கபுரம்,மேலவெள்ளமடம்
பிள்ளையன்மனை,உடையார்குளம், மணிநகர்,நாசரேத் கஸ்பா தொடக்கப்பள்ளி, வகுத்தான்குப்பம்,
நாசரேத் மதுரம் நடுநிலைப்பள்ளி,
நாசரேத் பேருந்து நிலையம் ஆகிய 16 இடங்களில் நடந்தது. இதில் சுமார் 1160 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
அதே போல் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த முகாம் ஞானராஜ்நகர், பிரகாசபுரம், வெள்ளரிக்காயூரணி, மூக்குப்பீறி, கச்சனாவிளை, புறையூர், இடையன்விளை, நாலுமாவடி, திருமலர்புரம், பணிக்கநாடார்குடியிருப்பு , சுந்தர்ராஜ புரம் ஆகிய 12 இடங்களில் நடந்தது. இதில் சுமார் 800குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில்1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


