» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேருந்துகள் நிற்பதே இல்லை; எதற்கு நிழற்குடை? கனிமொழி எம்பியுடன் பெண்கள் வாக்குவாதம்!
வெள்ளி 26, ஜூன் 2026 11:05:20 AM (IST)
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், அப்பகுதியில் பேருந்துகள் நிற்பதில்லை என்று கூறி உள்ளூர் பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஓடக்கரை பகுதியில் புதிதாகப் பேருந்து நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்குத் திரண்ட அப்பகுதி பெண்கள், கனிமொழியை முற்றுகையிட்டுப் பேசினர். "இந்த ஓடக்கரை பகுதியில் அரசுப் பேருந்துகள் எவையுமே நிற்பதே இல்லை. பேருந்துகள் நிறுத்தப்படாத இந்த இடத்தில் எதற்காகப் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது?" என அவர்கள் அதிரடியாகக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த கனிமொழி, "திமுக ஆட்சியாக இருந்தால் பேருந்துகள் கண்டிப்பாக இங்கு நின்று சென்றிருக்கும்" என்று கூறினார். அவரது பதிலால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், திமுக ஆட்சியிலும் கூட இந்த இடத்தில் பேருந்துகள் நிற்கவில்லை என்று கூறினர். பெண்களின் இந்த திடீர் கேள்விகளாலும் தொடர் வாக்குவாதத்தாலும் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Jun 26, 2026 - 11:11:55 AM | Posted IP 162.1*****
நாடாளுமன்றத்தில் போய் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பொறுப்புக்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறதா? என கெத்தாக கேள்வி எழுப்பினார். அதை உன் அண்ணன்கிட்டபோயி கேளு என நிர்மலா பதில் சொன்னார். கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களை மாநில அரசுதான் செய்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்தான் நம்ம கனிமொழி.... இப்ப காயல்பட்டணத்துல வாஙகிக் கட்டிக்கிட்டு வந்துருக்குது... கருணாநிதி மகள் எனற் ஒரே தகுதியில் பதவியை பெற்றால் இப்படி எல்லா இடங்களிலும் அசிங்கப்படத்தான் வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)



இதுJun 27, 2026 - 10:10:22 PM | Posted IP 172.7*****