» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன் 28ஆம் தேதி டவுண் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருநெல்வேலி டவுண் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவில் ஆனிப்பெருந் தேரோட்டத் திருவிழா வரும் ஜூன் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெறவுள்ளது. 

இந்தத் திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால், டவுண் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் நிகழாமல் அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருக்கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களைத் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் 5 அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் ஒரு தனியார் பார் ஆகியவை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

டவுண் வடக்கு மவுண்ட் ரோடு - மதுபானக் கடை எண்: 10717

மணிப்புரம் சர்வீஸ் ரோடு - மதுபானக் கடை எண்: 10718

நயினார்குளம் மார்க்கெட் - மதுபானக் கடை எண்: 10733

நயினார்குளம் வத்தல் மார்க்கெட் - மதுபானக் கடை எண்: 10724

தச்சநல்லூர் தேநீர்குளம் - மதுபானக் கடை எண்: 10813

மணிப்புரம் சர்வீஸ் ரோடு கடை எண்: 10718 அருகில் உள்ள தென்றல் மனமகிழ் மன்றம் (பார்)

இந்த உத்தரவை மீறி யாரேனும் அன்றைய தினம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory