» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)
நெல்லை அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது கூலி தொழிலாளியைப் போக்சோ சட்டத்தின் கீழ் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
நெல்லை பேட்டை காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நெல்லை பகுதியைச் சேர்ந்த 5 வயதான, யு.கே.ஜி. படித்து வரும் சிறுமி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த மாணிக்கம், அந்தச் சிறுமியை நயவஞ்சகமாகத் தனியாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் பாதிப்பும் அடைந்த அந்தச் சிறுமி, அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விபரமாகத் தெரிவித்துள்ளாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து நெல்லை குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்கு பணியாளர் இசக்கியம்மாள், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
குழந்தைகள் நல்வாழ்வு குழுவினர் அளித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 5 வயது சிறுமிக்கு கூலி தொழிலாளி மாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்தது முற்றிலும் உறுதியானது.
இதையடுத்த சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ பிரிவின் கீழ் மாணிக்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


