» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா: 4,000 பேருக்கு அன்னதானம்!

செவ்வாய் 12, மே 2026 4:42:19 PM (IST)



தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு, 4,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி சைவ வேளாளர் மண்டபத்தில் ஹரிஷ்மா கோல்ட் பைனான்ஸ் சார்பில் அதன் அதிபர் பி. திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின் படி, 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியைத் மாவட்ட அதிமுக தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர். சுதாகர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி மகிமை அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், எல்.ஐ.சி. கிட்டு, தொழில் அதிபர்கள் டி.ஏ. தெய்வநாயகம், எஸ்.பி. டைகர் சிவா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 39-வது வார்டு மகளிர் அணி தலைவி உஷா தேவி  உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

யோபு ராஜ் (எ)அபிJun 20, 2026 - 01:56:17 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடி சத்யா நகரில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் இந்த மாதிரியான மாதிரி அன்னதானம் போடனும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory