» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:40:23 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4-ம் தேதி (04.05.2026) கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பொதுமக்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை குறித்த புகார்கள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை வருகிற மே 1-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் ஆய்வு!
சனி 20, ஜூன் 2026 12:48:36 PM (IST)

மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்த தூத்துக்குடி பெண் கைது: அரசுப் பேருந்தில் பரபரப்பு!
சனி 20, ஜூன் 2026 8:21:30 AM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)


