» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம் : பயணிகள் உற்சாகம்!
திங்கள் 30, மார்ச் 2026 8:36:45 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுமார் ரூ.452 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளுக்குப் பிறகு, நேற்று முதல் இரவு நேர விமான போக்குவரத்து சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது.
கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் தேவையான சிக்னல் மற்றும் ஓடுதள விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த வசதிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்ட விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது. மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடைந்தது.
முதல் இரவு நேர சேவையில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய இயக்குநர் மற்றும் ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்தச் சாதனையைத் துரிதப்படுத்தும் விதமாகப் பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் இரவு நேர விமான சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் விமான நிலைய மற்றும் இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் மோனிகா தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஏடிசி பிரிவு தலைவர் ராஜலட்சுமி முன்னிலையில் விமானங்களின் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்பாடு உறுதி செய்யப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விற்பனைப் பிரிவு மேலாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆகியோர் பயணிகளுக்கான சேவைகளை ஒருங்கிணைத்தனர்.

முதல் நாளிலேயே இந்தச் சேவைக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடியிலிருந்து தலா 78 பயணிகள் (அனைத்து இருக்கைகளும் நிரப்பப்பட்டு) பயணம் மேற்கொண்டனர். இந்தச் சேவை வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்காகப் பயணிப்போருக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தற்போது தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 4 விமானங்கள், பெங்களூருக்கு 1 விமானம் என மொத்தம் 5 தினசரி சேவைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)


ஒருவன்Mar 30, 2026 - 10:49:42 AM | Posted IP 104.2*****