» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)
திமுக வேட்பாளர் பட்டியலில் பத்மநாபபுரம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.
திமுக சார்பில் கன்னியாகுமரியில் ரெ. மகேஷ், நாகர்கோவில் தொகுதியில் எஸ். ஆஸ்டின் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக வேட்பாளர் பட்டியலில் பத்மநாபபுரம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது.
தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அந்த வகையில் 164 தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் திமுக இன்று வெளியிட்டது. வேட்பாளர் பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனோ தங்கராஜ், ஆர்.காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தொகுதியிலும், கயல்விழி செல்வராஜ் தாராபுரம் தொகுதியிலும், ஆர்.காந்தி ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நிலையில் அமைச்சர்கள் 3 பேருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை சரியாக செயல்படாத எம்எல்ஏக்களுக்கு திமுகவில் இந்த முறை சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, எழும்பூரின் சிட்டிங் எம்எல்ஏவான பரந்தாமனுக்கு பதில், தமிழன் பிரசன்னாவுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில், சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. அவரின் பத்மநாபபுரம் தொகுதி கூட்டணி கட்சியான சிபிஎம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அண்ணா நகர்: எம்.கே. மோகனுக்குப் பதில் நே. சிற்றரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
எழும்பூர்: இ. பரந்தாமனுக்குப் பதில் தமிழன் பிரசன்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.
தியாகராய நகர்: ஜெ. கருணாநிதிக்குப் பதில் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தூர்: ஜோசப் சாமுவேலுக்குப் பதில் டாக்டர் அ.பு. பூர்ணிமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராயபுரம்: ஐடீம் ஆர்.மூர்த்திக்கு பதில் டாக்டர சுபேர்கான் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திரு.வி.க.நகர்: சிவகுமாருக்கு பதில், கே.எஸ்.ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்
வில்லிவாக்கம்: வெற்றியழகனுக்கு பதில், கார்த்திக் மோகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்
காஞ்சிபுரம்: சி.வி.எம்.பி. எழிலரசனுக்குப் பதில் நித்யா சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம்: எம். பழனியாண்டிக்கு பதில் எஸ். துரைராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்
திருப்பூர் தெற்கு: க. செல்வராஜ்க்கு பதில், என். தினேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்
நாமக்கல்: பெ. ராமலிங்கத்திற்கு பதில் பி. ரமணி மாற்றப்பட்டுள்ளார்
விக்கிரவாண்டி: அன்னியூர் சிவாவுக்கு பதில் என். புகழேந்தி மாற்றப்பட்டுள்ளார்
இப்படி பல தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்களது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


