» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)
நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக 6 ரயில்கள் ரத்து மற்றும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்துப் பாதையில், நாகர்கோவில் டவுன் முதல் இரணியல் வரையிலான பிரிவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதையில் தண்டவாள நிலவேலைகள் மற்றும் தடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், இரணியல் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய பாதையைப் பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதால், இப்பிரிவில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16729) இன்று (மார்ச் 28, சனிக்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16730), நாளை (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 30, திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்சியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். அன்றைய தினம் திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எனினும், மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு இந்த ரயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர ரயில்களைப் பொறுத்தவரை, திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22620), நாளை (மார்ச் 29) தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரயில் நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களுக்குச் செல்லாது.
இதேபோல், திருநெல்வேலி - ஜாம்நகர் ரயில் (வண்டி எண்: 19577), வரும் 30-ஆம் தேதி தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலை மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்குச் செல்லாமல், மாற்றுப் பாதையில் உள்ள தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


