» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை சென்னையில் இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். அதில் தூத்துக்குடி தொகுதியில், விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் ஜேகேஆர் முருகன், கோவில்பட்டி தொகுதியில் பாலசுப்ரமணியன், விளாத்திகுளம் தொகுதியில் காசிராம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் மதன்ராஜா, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சரவணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. தூத்துக்குடி - ஸ்ரீநாத் (நடிகர் & இயக்குனர்)
சென்னையைச் சேர்ந்த இவர், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர். எட்மண்ட் இவருடைய தாயின் சகோதரர் (மாமா). மேலும், பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர். திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர். பூர்வீகம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டணம் ஆகும்.
2. திருச்செந்தூர் - JKR. முருகன் (தொழிலதிபர்)
தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநர். ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை எனப் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். இவரது மனைவி சுபத்ரா, த.வெ.க-வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர்களுக்கு சிவபிரகாஷ், தீபிகா என இரு குழந்தைகள் உள்ளனர்.
3. ஸ்ரீவைகுண்டம் - அன்னை வி.ஜி. சரவணன்
36 வயதான இவர் ஏரல் அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். (சமூக ஆர்வலர். வி.ஜி.எஸ். மக்கள் நல அறக்கட்டளை' மூலம் தினமும் 200 பேருக்கு இலவச உணவு, ஏழைகளுக்கு இலவச அமரர் ஊர்தி மற்றும் சவப்பெட்டி சேவைகளை வழங்கி வருகிறார். 'தளபதி பயிலகம்' மூலம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், பெண்களுக்கு இலவசத் தையல் பயிற்சியும் வழங்கி வருகிறார். குடும்பம்: மனைவி உமாவதி மற்றும் 2 மகள்கள்.
4. ஓட்டப்பிடாரம் - மதன்ராஜா (பொறியாளர்)
42 வயதான இவர் முப்புலிவெட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். த.வெ.க-வின் தூத்துக்குடி புறநகர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். மனைவி ரேகா (கோவை அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்), மகள்கள் மகிஷா மற்றும் மோனிஷா.
5. விளாத்திகுளம் - பொன் காசிராம் (விவசாயி)
45 வயதான இவர் பூதலாபுரத்தைச் சேர்ந்தவர். ஐ.டி.ஐ முடித்துள்ளார். விவசாயம் மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி, தற்போது த.வெ.க-வின் வடக்கு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். மனைவி தீபா (சத்துணவு அமைப்பாளர்), மகள் அனுஸ்ரீ மற்றும் மகன் அஜய் சரண்.
6. கோவில்பட்டி - பாலசுப்பிரமணியன் (தொழிலதிபர்)
41 வயதான தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் ஐ.டி.ஐ முடித்துள்ளார். சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் (Export Business) நடத்தி வருகிறார். த.வெ.க-வின் வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். குடும்பம்: மனைவி மஞ்சுளா மற்றும் 2 குழந்தைகள்.
அஜிதா ஆதரவாளர்கள் அதிருப்தி
தமிழக வெற்றிக் கழககத்தின் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்தவர் அஜிதா ஆக்னல். இவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பனையூரில் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் அஜிதா ஆக்னல் பெயர் இடம்பெறாத காரணத்தால் தூத்துக்குடியில் அவரது ஆதரவாளர் ஒருவர் தனது காரில் இருந்த த.வெ.க. கொடி மற்றும் சின்னமான விசிலையும் கழற்றி வீசியுள்ளார்.
மக்கள் கருத்து
க்ப்புMar 30, 2026 - 09:11:45 AM | Posted IP 104.2*****
எவன் இந்த ச்ரிநாத்து?
கேள்விMar 30, 2026 - 08:06:20 AM | Posted IP 172.7*****
தூத்துக்குடி தொகுதியில், விஜயின் நண்பர் ஸ்ரீநாத் அவர் பிறந்த ஊரு என்ன?
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)


KarnarajMar 30, 2026 - 09:57:53 AM | Posted IP 162.1*****