» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சுவர் மீது கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலி: மனைவி குழந்தைகள் காயம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:51:13 AM (IST)
கயத்தாறு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சுவர் மீது மோதிய விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுடலைமணி (34). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். சுடலைமணி தனது மனைவி பிரியா (29), மகன் அமித் (6) மற்றும் 2½ வயது மகள் மனிஷா ஆகியோருடன் சென்னையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குக் காரில் புறப்பட்டார்.
இந்தக் காரைச் சுடலைமணியின் மாமனார் பாண்டி என்பவர் ஓட்டினார். மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற கார் சாலையோரக் கடை ஒன்றின் சுவர் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சுடலைமணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். காரை ஓட்டிய பாண்டி, அவரது மகள் பிரியா மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். உயிரிழந்த சுடலைமணியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விடுமுறைக்காக ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் பலியான சம்பவம், அவரது சொந்த ஊரான திருமங்கலகுறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

