» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அமைச்சர் கீதா ஜீவன் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, மார்ச் 2026 8:17:02 PM (IST)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், இன்று அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனின் வாகனத்தை நிறுத்தி அதிரடிச் சோதனை நடத்தினர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 45 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி 60 அடி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி. கீதா ஜீவனின் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, அமைச்சரின் காரில் இருந்த பைகள் மற்றும் வாகனத்தின் டிக்கி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் அதிகாரிகள் முழுமையாகச் சோதனையிட்டனர். மேலும், வாகனத்திற்கான ஆவணங்களையும் சரிபார்த்தனர். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் சிக்காத நிலையில், அமைச்சரின் வாகனம் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டது.
அமைச்சர் ஒருவரின் வாகனத்தையே தேர்தல் அதிகாரிகள் இடைமறித்துச் சோதனை செய்த சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

