» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!
செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் அஜாக்கிரதையாக லாரி ஓட்டி வந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் ரூ. 10,000 அபராதம் விதித்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின்படி, நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர். லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மதுபோதையில் இருந்தது கருவி மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் கோவிந்தனுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனத் தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)


MullaimathiMar 24, 2026 - 02:09:05 PM | Posted IP 104.2*****