» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாஜகவில் இணைந்த தூத்துக்குடி தொழிலதிபர்

வெள்ளி 20, மார்ச் 2026 11:26:02 AM (IST)



தூத்துக்குடி தொழிலதிபர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கியத் தொழிலதிபர் உட்படப் பலர் பாஜகவில் இணைந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் (மறைந்த) மகாராஜா பிள்ளையின் பேரன் சுந்தர் மகாராஜன் மற்றும் தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவன அதிபரும், முன்னாள் ஓ.பி.எஸ். அணியின் செயற்குழு உறுப்பினருமான ரமேஷ் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

சென்னை தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது - திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் முத்து பலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

ValthukkalMar 24, 2026 - 01:07:45 PM | Posted IP 162.1*****

Valthukkal

JJRINMar 23, 2026 - 10:51:47 AM | Posted IP 172.7*****

தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory