» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேகர் தேஷ்முக், இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஆணையராகச் சேகர் தேஷ்முக் நியமிக்கப்பட்டார். இன்று காலை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "திருநெல்வேலி மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, மிகவும் அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 3:09:41 PM (IST)

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 12:26:10 PM (IST)

குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
செவ்வாய் 3, மார்ச் 2026 12:18:52 PM (IST)

