» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்

புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம் அடைந்துள்ளது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்துப் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் சாலையில், சீனா வானா குளம் கரையோரத்தில் கடந்த 2022–2023ஆம் ஆண்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில், 2,480 மீட்டர் நீளத்திற்குச் சிமெண்ட் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டது. 

திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நடைபாதை பல இடங்களில் உடைந்து சிதிலமடைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால் நடைபாதையின் இருபுறமும் முள்செடிகள் மண்டி, புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் மிகுந்த இடமாக மாறியுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்த விதிகளின்படி குறிப்பிட்ட காலம் வரை திட்டத்தைப் பராமரிக்க வேண்டிய கடமை ஒப்பந்ததாரருக்கு உண்டு. அவ்வாறு இருக்கையில், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காததும், அவரது பாதுகாப்பு வைப்புத் தொகையைப் (Security Deposit) பிடித்து வைக்காததும் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடே ₹2 கோடி மக்கள் வரிப்பணம் வீணாவதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

₹2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலமடைந்திருப்பது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும். பணிகளில் தரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உடனடியாக நடைபாதையைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை எனில், பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

BabuMar 5, 2026 - 09:55:26 AM | Posted IP 162.1*****

Yenna nenga bukkel odai potta road Yellam ungaluku theriyatha cemented ilama road poturukanuga athulam ungaluku therilaya ungaluku porattam panna time irukathu antha alavuku latchnathula than ivanuga senja celaikal irukuthu fst antha idathuku yethuku alangaram pananuga therila apuram yen pottu potanuganum therila ipad yarum kelvi kekama than road Yellam latchanama irukuthu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory