» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

ஞாயிறு 1, மார்ச் 2026 6:45:48 PM (IST)

தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் மா. பிரம்மநாயகம் பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல். முருகனுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ஹைதராபாத் மற்றும் தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்காக, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அமைச்சருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். 
  • வாரம் இருமுறை மட்டும் இயக்கப்படும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் (16765-16766) ரயிலைத் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
  • மும்பை லோக்மான்யா திலக் - மதுரை (22101-22102) ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
  • திருநெல்வேலி - கன்னியாகுமரி (56707-56708) ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
  • திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் (56831-56833 / 56832-56834) ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே அதிநவீன "வந்தே பாரத்" ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
  • தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி விரைவு ரயிலில் (16791-16792) போதிய குளிர்சாதன பெட்டிகள் இல்லாததால் பயணிகள் அவதியுறுகின்றனர். எனவே, அதில் உடனடியாக ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும்.
இந்த மனுவின் நகல்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும் எனப் பயணிகள் நலச்சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

BabuMar 1, 2026 - 11:49:26 PM | Posted IP 104.2*****

Veruk vilamparama ithu summave coach vachu kiakum merkum sanding adichu 4 gate moodi uira vanguranga ithula intha latchanathula ithana vandi varathu vantha yenga stop panni vaipanga platform EXTN panna side la irukura building idika yaru permit panuvanga sirichutu thali poiriranum pola

Travel StarMar 1, 2026 - 11:03:49 PM | Posted IP 104.2*****

In addition to the above, we need a train to the east coast as well. If possible Shalimar Chennai should be extended upto Tuticorin.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory