» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தியாகிகள் மற்றும் சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நினைவுச் சின்னங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஆர். பொன்னப்ப நாடார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்குச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர். திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்தவர்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ், தாரகை கத்பட், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயர் ஆர். மகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பொன்னப்ப நாடார் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)


