» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வி.ஜி.எஸ் பள்ளியின் 10-வது தாளாளராக சுதன் ஹீலர் பொறுப்பேற்பு!
சனி 28, பிப்ரவரி 2026 9:31:12 PM (IST)

143 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி கொண்ட தூத்துக்குடி வி.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் பத்தாவது தாளாளராக சுதன் ஹீலர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கடந்த 1883-ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலரத வீதியில் ஒரு தொடக்கப் பள்ளியாக இது நிறுவப்பட்டது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குச் சொந்தமான, சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளி, தற்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களுக்குச் சிறந்த கல்விச் சேவையை இப்பள்ளி வழங்கி வருகிறது. இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே" என்ற இறை வேண்டலுடன் சுதன் ஹீலர் தனது பணிகளைத் தொடங்கினார்.
இவர் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் கணவர் ஜீவன் ஜேக்கப்பின் தம்பி ஆவார். மேலும், அமைச்சர் கீதா ஜீவனின் தங்கை இவருடைய மனைவியாவார். போல்பேட்டை சேகரத்தைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவருமே மருத்துவப் படிப்பு பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தாளாளராகப் பொறுப்பேற்ற சுதன் ஹீலருக்கு, போல்பேட்டை சேகரத்தைச் சேர்ந்த முன்னாள் திருமண்டல பொருளாளர் மோகன், தூய பேட்ரிக் இணைப் பேராலய பொருளாளர் தேவராஜ், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஹென்றி உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் மற்றும் சபை விசுவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Mar 1, 2026 - 12:44:03 PM | Posted IP 104.2*****
பெண்கள் பள்ளிக்கு தாளாளராக ஒரு பெண் கூடவா இந்த திருமண்டலத்தில் இல்லை....
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)


வேடிக்கைMar 2, 2026 - 09:13:55 AM | Posted IP 162.1*****