» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினர் கொந்தளிப்பு - அலுவலகத்தில் படங்களை அகற்றிய மாவட்ட செயலாளர்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:17:13 PM (IST)

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த அதிரடி மாற்றம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ். ஏசாத்துறை, தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏசாதுரை "அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கும், அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்த புரட்சித்தலைவி அம்மாவுக்கும் ஓ. பன்னீர்செல்வம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தைச் செய்துவிட்டார். இவரை எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆத்மாக்கள் என்றும் மன்னிக்காது.

மேலும், தூத்துக்குடியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஓபிஎஸ்-ஸின் இந்த இடமாற்றம் தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் அணியினரிடையே பெரும் பிளவையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

திருட்டு திராவிடம்Feb 27, 2026 - 03:16:09 PM | Posted IP 104.2*****

அது என்ன அதிர்ச்சி? அதெல்லாம் ஒன்னும் இல்லை , திமுகவும் அதிமுகவும் கள்ள உறவு கட்சிகளே , MLA க்கள் மாறி மாறி குரங்கு போல் தாவுவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory