» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:44:05 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை, தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் ராஜ்குமார் மற்றும் சங்கர் ஆகிய இரு பணியாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாகப் பரவிய விஷவாயு தாக்கியதில், ராஜ்குமார் சாக்கடைக்குள்ளேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்த சங்கர் மயக்கமடைந்த நிலையில், சக பணியாளர்களால் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ராஜ்குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையல், உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ராஜ்குமாரின் மனைவி சுபாவிற்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இலவச வீடு மற்றும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களிடடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)


PITCHUFeb 27, 2026 - 10:43:57 AM | Posted IP 104.2*****