» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)



தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி தேவர் புரம் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாநகரச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் முத்துச்செல்வம் தலைமை தாங்கினார். மாநகர அவைத் தலைவர் மதியழகன் மற்றும் மாநகர துணை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.  

மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ் மற்றும் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநகர மாணவரணி செயலாளர் விஜய் கார்த்திக் நன்றியுரை ஆற்றினார்.

தூத்துக்குடியின் பிரதான பகுதியான மாநகராட்சி அலுவலகம் மற்றும் காய்கனி மார்க்கெட் அருகில் அண்ணா சிலையை சுற்றி ஐந்து ரோடுகள் சந்திப்பில் பல கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது ஆனால் பொதுமக்கள் மாணவர்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் முறையான வேகத்தடைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது ஆகவே அண்ணா சிலை அருகில் பால விநாயகர் கோவில் தெரு முகப்பு, ஜெயம் சூப்பர் மார்க்கெட் முன்பு ஆகிய பகுதிகளில் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், உதயசூரியன் மற்றும் மாவட்ட, மாநகர, வார்டு நிர்வாகிகள் எனப் திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கோமாளிFeb 23, 2026 - 06:40:29 PM | Posted IP 162.1*****

முதல்ல சேதமடைந்த சிமெண்ட் சாலைகளை சரிபண்ண சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory