» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.02.2026) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 32 வகையான திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மற்றும் ஜல் ஜீவன் (உயிர்நீர் இயக்கம்) திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. சீர்மிகு நகர திட்டம் (Smart City), தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மின்விநியோக கழகம் (ஜோதி யோஜனா), பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் நலன் கருதி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அரசு அலுவலர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளைப் பரிசீலித்து, திட்டங்கள் முழுமையாகப் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

