» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்: எஸ்பி அதிரடி!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:48:36 AM (IST)
தூத்துக்குடியில் மதுபான பார் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்ட விவகாரத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி காலை 7:30 மணியளவில், சிவில் உடையில் வந்த 4 போலீசார் இந்த பாருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் இருவரை விசாரணை என்ற பெயரில் பிடித்துத் தாக்கியதோடு, மதுபான பாரின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.
உள்ளே தீவிர சோதனை நடத்திய போலீசார், அங்கு சட்டவிரோதமான பொருட்கள் ஏதும் சிக்காததால் ஆத்திரமடைந்து, அங்கிருந்த காலி மதுபாட்டில் மூட்டைகளைக் கீழே தள்ளிச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாருக்கு வெளியே வந்த போலீசார், அங்கு நின்றிருந்த பொதுமக்களையும் தாக்கி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. இந்த வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முறையான விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், பாருக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீசார் என்பது உறுதி செய்யப்பட்டது.
சட்டவிரோத மது விற்பனை நடக்கிறதா என்று சோதனையிடச் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், அதிகாலை நேரத்தில் கடையின் பூட்டை உடைத்ததும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கியதும் மனித உரிமை மீறல் எனப் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், போலீஸ் ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் ஆயுதப் படைக்கும், ஏட்டுக்கள் சமியுல்லா, சரவணன் ஆகியோர் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மதன் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)


BabuFeb 22, 2026 - 12:07:43 PM | Posted IP 104.2*****