» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் : சீமான் அறிவிப்பு
சனி 21, பிப்ரவரி 2026 8:00:53 PM (IST)

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. அதில் நாம் தமிழர் கட்சியும் வேகம் காட்டி வருகிறது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது. இந்த நிலையில், திருச்சியில் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில், சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்தினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் கல்வித் தகுதிகள்
ஓட்டப்பிடாரம் – அனுசியா (முதுகலை வணிகவியல் / ஆசிரியர் )
தூத்துக்குடி – இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (இளங்கலை அரசியல் அறிவியல்)
திருச்செந்தூர் – ஒபிலியா (இளநிலை கணினி பயன்பாடு)
ஸ்ரீவைகுண்டம் – சண்முகசுந்தரம் (தொழிற்கல்வி பட்டயம்)
விளாத்திகுளம் – பொறியாளர் பாலாஜி (பொறியியல் பட்டதாரி)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


Wilson .Feb 21, 2026 - 11:17:30 PM | Posted IP 104.2*****