» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை பலி: தந்தையின் கண் முன்னே பரிதாபம்!
சனி 21, பிப்ரவரி 2026 8:50:45 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, கேரளாவைச் சேர்ந்த அக்காள் மற்றும் தங்கை ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (45). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது குலதெய்வக் கோவில் விழாவிற்காகக் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தூத்துக்குடி வந்திருந்தார். திருச்செந்தூர் செல்லும் வழியில், ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு வந்த அவர்கள், அங்கிருந்த தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது சந்திரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) உட்பட 4 சிறுமிகள் ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கியதால் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை சந்திரகுமார் நீரில் குதித்து அவர்களை மீட்க முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுமிகளும், சந்திரகுமாரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அபிநயா மற்றும் மீனாட்சியைப் பிணமாக மீட்டனர். ஏரல் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தந்தையின் கண் முன்னாலேயே இரண்டு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


BabuFeb 21, 2026 - 01:20:02 PM | Posted IP 162.1*****