» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: 23ஆம் தேதி தொடக்க விழா
சனி 21, பிப்ரவரி 2026 8:45:48 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு புதிய திட்டப்ப ணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா வருகிற 23ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் வருகிற 23ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குத் இவ்விழா நடைபெறுகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைச்சர் திறந்து வைக்கிறார். 8 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் 5 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System) ஆகியவற்றுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளும் இதில் அடங்கும். இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


தமிழ்ச்செல்வன்Feb 21, 2026 - 10:18:42 AM | Posted IP 162.1*****