» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:32:35 PM (IST)
தேர்தல்கள் இருந்தும்கூட தமிழ்நாட்டுக்காக மத்திய பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை என்று மத்திய பட்ஜெட் மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "இந்த பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் 50 சதவிகித நிதிப் பகிர்வைக் கோரியபோதிலும், மீண்டும் 41 சதவிகிதம் மட்டுமே கூறியுள்ளனர். இது அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், இந்த பட்ஜெட்டில் உறுதியானதாக எதுவுமில்லை.தேர்தல்களை மனதில்கொண்டு கூட, அவர்கள் (பாஜக அரசு) தமிழ்நாட்டுக்காக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மண்ணை ஆட்கொள்ள மட்டும் அவர்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தமிழகத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகமிழைப்பதாக மத்திய பட்ஜெட்டைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களுடன் பாஜக அரசு போர் புரிவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கூறினார்.
மக்கள் கருத்து
ஆமாFeb 2, 2026 - 11:50:37 AM | Posted IP 104.2*****
நீட் ஒளித்து வைத்து வந்த இளம் விதவை தலைவி பேச்சை பாருங்க. சாராய ஆலை அதிபர் குடும்பங்களுக்கா?
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)


தமிழக மக்கள்Feb 3, 2026 - 03:52:52 PM | Posted IP 162.1*****