» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போதை பொருள் இல்லா தூத்துக்குடி விழிப்புணர்வு பேரணி!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 10:42:17 AM (IST)

தூத்துக்குடியில், கல்விக் குழுமம் சார்பாக "போதை பொருள் இல்லா தூத்துக்குடி” என்னும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி, காமராஜர் மகளிர் கல்லூரி, பாரத ரத்னா காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.எம்.எம்.எஸ்.சின்னமணி நாடார் பள்ளி சார்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்ட பேரணியை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் வி.கலைவாணி, காமராஜ் கல்லூரி செயலாளர் ரா.முத்துசெல்வம் முன்னிலையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் க.பானுமதி முன்மொழிய மாணவ, மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்தனர். இப்பேரணியில் காமராஜ் கல்லூரியின் 200 மாணவர்களும், காமராஜ் மகளிர் கல்லூரியின் 100 மாணவிகளும், பாரத ரத்னா காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 100 மாணவர்களும், ஏ.எம்.எம்.எஸ்.சின்னமணி நாடார் பள்ளியின் 100 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் முன்பு மாணவர்களால் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பேரணி முத்து நகர் கடற்கரை சென்றடைந்து, அங்கு போதை பொருள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளை காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர்கள் செந்தில், அருணாசலராஜன், கல்லூரி கண்காணிப்பாளர் பு.சரவணன், காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் ம.வான்மதி, பாரத ரத்னா காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கார்மல் சுமிதா, ஏ.எம்.எம்.எஸ்.சின்னமணி நாடார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரங்கநாதன், திருவேங்கடம் ஆகியோருடன் இணைந்து 14 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அணி 56ன் அலுவலர் மா.அய்யனுராஜ் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)


திமுக மாடல்Feb 2, 2026 - 11:38:47 AM | Posted IP 172.7*****