» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி பேரூராட்சிகள் மற்றும் தர்மபுரம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (15.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறப்புப் பழுது பார்த்தல் பணிகள் 2025 - 2026 ன் கீழ் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி பேரூராட்சிகளுக்குட்பட்ட பூதப்பாண்டி கிராமச் சாலை கி.மீ. 0/0 - 0/4 முடிய சிறப்புப் பழுது பார்த்தல் பணி ரூ.15.00 இலட்சம் மதிப்பீடு மற்றும் பூதப்பாண்டி கிராமச் சாலை கி.மீ. 0/4-1/2 முடிய சிறப்புப் பழுது பார்த்தல் பணி ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் (சி.ஆர்.ஐ.டி.பி.) 2025 -2026 ன் கீழ் தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டார் - தர்மபுரம் சாலை கி.மீ. 0/0 2/0 முடிய ஓடுதளம் மேம்பாடு செய்தல் பணி ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் உரிய சாலை பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவ துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சாலை பணிக்கு தேவையான பொருட்களை நவீன முறையில் கலக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 3:09:41 PM (IST)

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 12:26:10 PM (IST)

குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
செவ்வாய் 3, மார்ச் 2026 12:18:52 PM (IST)

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் கன்னியாகுமரி சாதனை: முதல்வர் பாராட்டு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:00:33 AM (IST)

