» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)
நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் (வண்டி என் 16354) புதிய LHB பெட்டிகளுடன் தனது முதல் பயணத்தை துவங்கியது.
நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் (16354) நாகர்கோவிலில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா வரை வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை மட்டும் இயக்கப்படும் வாராந்திர ரயில் தற்போது நவீன புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை துவங்கியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை திண்டுக்கல் திருச்சி கரூர் நாமக்கல் சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி திருப்பதி ரேணிகுண்டா கடப்பா கூட்டி கர்நூல் மகபூப்நகர் வழியாக வாரத்தில் ஒரு நாள் ஹைதராபாத்தின் காச்சிகுடா வரை செல்கிறது.இதுவரை இந்த ரயிலுக்கு பெட்டி பகிரமானம் கிடையாது. ஆனால் தற்போது LHB பெட்டியாக இந்த ரயில் மாற்றப்பட்டுள்ளதால் இதற்கு பெட்டி பகிர்மானம் வந்துள்ளது.
✓ நாகர்கோவில் - ஷாலிமார் குருதேவ் விரைவு
✓ நாகர்கோவில் - காந்திதாம் விரைவு
✓ நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ்
ஆகிய மூன்று ரயில்களும் தற்போது ஒரே பகிர்மானத்தில் வந்துள்ளது !! 21 பெட்டிகளை கொண்ட 2 RAKE பயன்படுத்தப்படுகிறது ...
முதன்மை பராமரிப்பு நாகர்கோவில் பிட் லைனில் நடைபெறும்
நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு ஷாலிமார் செல்லக்கூடிய பெட்டி மீண்டும் வெள்ளி நாகர்கோவில் வந்த பிறகு பராமரிப்புகளை முடித்துவிட்டு மீண்டும் செவ்வாய் காச்சிகுடா நோக்கி செல்லும் மீண்டும் காச்சிகுடாவில் புறப்பட்டு திங்கள் நாகர்கோவில் வரக்கூடிய பெட்டி பராமரிப்புகளை முடித்த பிறகு மீண்டும் செவ்வாய் அன்று நாகர்கோவிலில் புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் காந்திதாம் நோக்கி செல்லும் மீண்டும் அந்தப் பெட்டிகள் ஞாயிறு காலை நாகர்கோவில் வந்து சேரும் / மொத்தமாக 2 RAKE உள்ளது || இவ்வாறு தான் வாரத்தின் ஏழு நாட்களும் இந்த பெட்டிகளில் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கி பகிர்மானம் செய்கின்றனர். இந்த பெட்டி பகிர்மானம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)


.gif)