» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!

திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)



குமரி மாவட்டத்தின் கடைகோடி கிராமமான கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று (8.12.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக கலிங்கராஜபுரம் மற்றும் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கங்கள் அமைக்கும் பணியினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் அவர் பேசுகையில் - இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கன்னியாகுமரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையிலும், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்தல், அவர்களுக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் (விளையாட்டுத்துறை அமைச்சர்) உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளையாட்டுத்துறைக்கென முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடைகோடி கிராம இளைஞர்கள் விளையாட்டில் தேசிய மற்றும் உலக அளவில் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உயரிய நோக்கில் அதற்கென நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். 

2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், விளையாட்டு மைதான வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ஒரு பகுதியை இந்நோக்கத்திற்காக பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் கலிங்கராஜபுரத்தில் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கும், கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகளுக்கான மைதானம் அமைக்கும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளையாட்டுத்துறையில் கடைகோடி கிராமங்களில் உள்ள மாணவ மாணவியர்களை விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் வினு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, ராஜகுமார், அந்தோணி பிச்சை, மாஸ்டர் ராஜேஷ், பால்ராஜ், அப்துல் ரகுமான், சுரேஷ்குமார், முருகன் உட்பட பலர் கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory