» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி 2026 ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2024 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதற்கு, பள்ளிகளில் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு, கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த பாதிப்புடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.தீவிர பாதிப்பினையுடைய 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, உள்ளடக்கிய கல்வியின் கீழ் இயங்கும் ஆயத்த பயிற்சி மையம் மூலம் சிறப்பு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு வழிக் கல்வி பெறும் குழந்தைகளின் உடல் நலம், மனநலம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய - மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிட்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து, அறுவை சிகிட்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மருத்துவ முகாம் நடைபெறும் மையங்கள்
1. தக்கலை 05-12-2025 அரசு மேல்நிலைப் பள்ளி, தக்கலை
2. திருவட்டார் 08-12-2025 அரசு உயர்நிலைப் பள்ளி, திருவட்டார்.
3. மேல்புறம் 09-12-2025 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்புறம்.
4. கிள்ளியூர் 10-12-2025 அரசு மேல்நிலைப் பள்ளி, கருங்கல்
5. முஞ்சிறை 11-12-2025 வட்டார வளiயைம் முஞ்சிறை.
6. தோவாளை 05-01-2026 அரசு உயர்நிலைப் பள்ளி, இறச்சகுளம்.
7. அகஸ்தீஸ்வரம் 06-01-2026 SLB அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
8. இராஜாக்கமங்கலம் 07-01-2026 அரசு மேல்நிலைப் பள்ளி, இராஜாக்கமங்கலம்.
9. குருந்தன்கோடு 08-01-2026 அரசு நடுநிலைப் பள்ளி செட்டியார்மடம்
இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து நடத்த உள்ளன. இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கானல்நீரானது சார்மினார் ரயில் நீட்டிப்பு திட்டம் : ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்குமா?
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:13:07 PM (IST)

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே தீவிபத்து
வியாழன் 4, டிசம்பர் 2025 4:55:50 PM (IST)

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதன் 3, டிசம்பர் 2025 10:18:13 AM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)

கிறிஸ்துமஸ் புத்தாண்டு: தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:33:27 AM (IST)


.gif)