» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது: நல வாரிய தலைவர் பெருமிதம்

புதன் 30, ஜூலை 2025 4:08:50 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தினை குப்பையில்லா மாவட்டமாக மாற்றியதில் தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது என்று தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி கூறினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அவர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (30.07.2025) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி , தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்- தூய்மை பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை தொழில் முனைவோராக மாற்றக்கூடிய அற்புதமான திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.

நமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் மகத்தானது. இருப்பினும் சமூகத்தில் துஸய்மை பணியாளர்கள் குடும்பத்தினர் பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

தூய்மை காவலர்களின் வாழ்வினை மேம்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தூய்மை பணியாளர்களுக்கென நலவாரியத்தினை அமைத்து, அவர்களின் வாரிசுதார ர்கள் உயர்கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க ஆணையிட்டதோடு, தூய்மை பணியில் ஈடுபடும் அனைவரும் நோய் நொடியின்றி பணிபுரிவதை உறுதி செய்தார்கள்.

அதனடிப்படையில் தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பணியிடத்தில் விபத்து, மரணம் உறுப்புகளை இழத்தால், சரிசெய்ய இயலாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டால் இழப்புத்தொகையாக ரு.5 இலட்சமும், ஒரு கை, ஒரு காலினை இழந்தாலோ, ஒரு கண் முழுவதும் சரி செய்ய முடியாத அளவுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டலோ ரூ.1 இலட்சமும், இயற்கை மரண தொகை ரூ.20,000மும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5000 என விபத்துக்காப்பீடு வழங்கப்படும்.

மேலும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5000, கல்வி உதவித்தொகையாக 10 வகுப்பு படிப்பதற்கு (பெண்களுக்கு மட்டும்), 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 11ம்வகுப்பு படித்துவரும் (பெண்களுக்கு மட்டும்) ரூ.1000, 12ம் வகுப்பு படித்தும் வரும் (பெண்களுக்கு மட்டும்), 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், முறையான பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவைகளுக்கு ரூ.1500ம், விடுதியில் தங்கி படித்தால் ரூ.1750ம், முறையான பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.4000ம், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.5000ம், தொழில் நுட்ப பட்டப்படிப்பு ரூ.4000ம், விடுதியில் தங்கி படித்தால் ரூ.6000, தொழில் நுட்ப பட்டமேற்படிப்பு ரூ.6000ம், விடுதியில் தங்கி படித்தல் ரூ.8000, ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு ரூ.1000, விடுதியில் தங்கி படித்தால் ரூ.1200ம் வழங்கப்படும். 

திருமண உதவித்தொகை தொழிலாளர் (அ) மகன் (அ) மகள் குடும்பத்திற்கு இருமுறை மட்டும் ஆண் எனில் ரூ.3,000, பெண் எனில் ரூ.5000மும், மகப்பேறு உதவி ரூ.3000, கருச்சிதைவு அல்லது கருகலைப்பு ரூ.6000ம், கண் கண்ணாடி உதவி ரூ.500ம், முதியோர் ஓய்வு ஊதியம் ரூ.1000 வழங்கப்படும். எனவே தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து, நலத்திட்டங்களை பெற கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து நகராட்சியில் பணியாற்றும் 130 தூய்மை பணியாளர்களுக்கும், பேரூராட்சிகளில் பணியாற்றும் 794 தூய்மை பணியாளர்களுக்கும், ஊராட்சிகளில் பணியாற்றும் 910 தூய்மை பணியாளர்களுக்கும், நகர திட்டமிடல் அலுவலகத்தில் பணியாற்றும் 1 பயனாளிக்ம், அரசு மருத்துவமனை கல்லூரியில் பணியாற்றும் 159 தூய்மை பணியாளர்களுக்கும், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 3 பணியாளர்களுக்கும், முட்டம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 1 பயனாளிக்கும், நீதிமன்றத்தில் பணியாற்றும் 1 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 2,578 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 593 ஒப்பந்த பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து மரண உதவித்தொகை ரூ.1 இலட்சம் 1 பயனாளிக்கும், இயற்கை மரண உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு ரூ.60,000மும், கல்வி உதவித்தொகை 95 பயனாளிகளுக்கு ரூ.15.67 இலட்சமும், திருமண உதவித்தொகை 3 பயனாளிகளுக்க ரூ.9000மும், ஈமச்சடங்கு உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.6000மும், கண்கண்ணாடி உதவித்தொகை 16 பயனாளிகளுக்கு ரூ.9,250 மகப்பேறு உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.6000மும் என மொத்தம் 123 பயனாளிகளுக்கு ரு.3.47 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக 10 தூய்மைப்பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளருக்கான விபத்து நிவாரண உதவி ரூ.5 இலட்சத்தில் இருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டில் ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. நமது குமரி மாவட்டத்திற்கு மூன்று ரோபோ இயந்திரங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வைத்துள்ளேன் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பரிசீலினை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தூய்மை பணியாளர்களுக்கு உயிர் காக்கும் உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து கிராமப்புறங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் 65 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை, 13 பயனாளிகளுக்கு சீருடைகள், 11 பயனாளிகளுக்கு ரூ.72,000 உதவித்தொகை, 19 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, பயணியர் கார் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரூ.84.12 இலட்சம் மதிப்பில் தாட்கோ கடன், 17 பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கபட்டுள்ளது.

தூய்மை காவலர்களின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவதை உறுதிசெய்ய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தூய்மை பணியில் ஈடுபடும் போது கையுறைகள், சீருடைகள் அணிய வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தினை குப்பையில்லா மாவட்டமாக மாற்றியதில் தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல் அலுவலர் கு.கோவிந்தராஜ், (ஓய்வு) நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட தாட்கோ மேலாளர் தெய்வக் குருவம்மாள், உதவி இயக்குநர்கள் இராமலிங்கம் (பேரூராட்சிகள்), அன்பு (ஊராட்சிகள்), உதவி மேலாளர் ராஜா, நகராட்சி ஆணையாளர்கள், தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மூக்கையா, விஜய் சுந்தர், துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory