» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை

புதன் 30, ஜூலை 2025 4:01:09 PM (IST)



கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது. 

இதையொட்டி அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மன் முன் படைத்து பூஜைகள் செய்யப்பட்டன. 

குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பூஜையில் பங்கேற்றார். பின் நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் திருக்கோயில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory